மலேசியா: ஆர்டிஎஸ் திட்ட அம்சங்கள் இன்னும் முடிவாகவில்லை

2 mins read
de87902f-65f4-4c36-8339-73796a1e7e25
ஆர்டிஎல் இணைப்பில் ஜோகூர் பாருவில் புதிதாக அமையவுள்ள இஸ்கந்தர் புத்ரி ரயில் நிலையத்தின் வடிவமைப்பு (ஓவியரின் கைவண்ணத்தில்). படம்: EDELMAN -

சிங்­கப்­பூர்-கோலா­லம்­பூர் அதி­வி­ரைவு ரயில் சேவை தொடர்­பான திட்ட அம்­சங்­கள் குறித்து இன்­னும் முடிவு செய்­ய­வில்லை என்று மலே­சிய அர­சாங்­கம் நேற்று தெரி­வித்­தது.

ரயில் பாதை சிங்­கப்­பூ­ருக்­குப் பதி­லாக ஜோகூர் பாரு­வில் நிறைவ­டை­வது குறித்து மலே­சியா பரி­சீ­லனை செய்து வரு­வ­தாக செய்தி­ கள் வெளி­யா­னதை அடுத்து இந்த அறி­விப்பு செய்­யப்­பட்­டது.

திட்­டத்தை மேம்­ப­டுத்த பல புதிய பரிந்­து­ரை­களை மலே­சிய அர­சாங்­கம் முன்­வைத்­துள்­ள­தாக அந்­நாட்­டின் பொரு­ளி­யல் விவ­கார அமைச்­சர் முஸ்­தஃபா முகம்­மது கூறி­னார்.

இது­தொ­டர்­பாக அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை கலந்­து­ரை­யாட மலே­சி­யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் கால அவ­கா­சம் இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

பேச்­சு­வார்த்தை முடிந்து முடிவு எடுக்­கப்­பட்­ட­தும் அது­கு­றித்துமலே­சிய அர­சாங்­கம் அறி­விப்பு செய்­யும் என்­றார் அவர்.

ரயில் பாதை­யின் கடைசி நிலை­ய­மாக சிங்­கப்­பூ­ருக்­குப் பதி­லாக ஜோகூர் பாரு அமைந்­தால் 2010ஆம் ஆண்­டில் முதன்­மு­த­லாக அறி­விக்­கப்­பட்ட இந்­தத் திட்­டம் சிங்­கப்­பூ­ரின் பங்­கேற்பு இல்­லா­மல் தொட­ரும் என்று கூறப்­ப­டு­கிறது.

மலே­சி­யா­வின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க இந்­தத்திட்­டம் இரண்டு முறை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­பட்­டது.

2018ஆம் ஆண்­டில் ரயில் பாதை குறித்த திட்ட அம்­சங்­களை முடிவு செய்ய கடந்த மே மாதம் வரை கால அவ­கா­சம் வழங்­கப்­பட்­டது. இது தற்­போது அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

மலே­சி­யா­வால் புதிய பரிந்­து­ரை­கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருப்­பதை சிங்­கப்­பூ­ரின் போக்­கு­வ­ரத்து அமைச்சு உறுதி செய்­துள்­ளது.

நட்­பு­ற­வு­டன் மலே­சி­யா­வு­டன் கலந்­து­ரை­யாடி வரு­வதா­க­வும் அதி­வி­ரைவு ரயில் சேவை தொடர்­பான இரு­த­ரப்பு ஒப்­பந்­தத்­தின்­கீழ் தனது பொறுப்­பு­களை நிறை­வேற்ற முழு கடப்­பாடு கொண்­டி­ருப்­ப­தா­க­வும் போக்­கு­வ­ரத்து அமைச்சு கூறி­யது.

அடுத்த மாதம் 31ஆம் தேதிக்­குள் திட்­டத்தை மலே­சியா தொடங்­கா­விட்­டால் சிங்­கப்­பூ­ருக்கு ஏற்­பட்ட செல­வு­களை அது ஏற்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்