ஜனவரி 2021 முதல் கழிவுப் பொருள் இறக்குமதிக்கு முற்றிலுமாக கதவை மூடும் சீனா

ஜனவரி 2021 முதல் கழிவுப் பொருள் இறக்குமதிக்கு முற்றிலுமாக கதவை மூடும் சீனா

1 mins read
9984474e-7066-416a-92e4-1f1d4777f5f2
படம்: அன்ஸ்பிளாஷ் -
Google News Preferred Icon

ஜனவரி 2021 முதல் வெளிநாடுகளிலிருந்து கழிவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை சீனா நிறுத்த இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 1980 முதல் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட திடக் கழிவு பிளாஸ்டிக் போன்ற பொருட்களைக் கழுவி சுத்தம் செய்து தொழிற்சாலைகளின் மூலப் பொருட்களால சீன நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தன.

பல ஆண்டுகளாக உலகின் ஆகப் பெரிய கழிவுப்பொருள் இறக்குமதியாளராக இருந்து வந்தது சீனா. மட்கிப்போகாத, மறுபயனீடு செய்யமுடியாத பொருட்களை பல நாடுகள் சீனாவுக்கு அனுப்பி வந்தன. அதனால் சீனாவிலும் குப்பை அதிகரித்து வந்தது.

அதற்கு முடிவு கட்டும் நோக்கில், கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரியில், கழிவுப் பொருள்கள் இறக்குமதிக்குத் தடை விதித்தது சீன அரசு.

அப்போது முதல் கொஞ்சம் கொஞ்சமாக பிளாஸ்டிக், காரின் பாகங்கள், காகிதம், துணிகள், கழிவு இரும்பு அல்லது மரம் போன்றவற்றின் இறக்குமதியையும் சீனா குறைத்தது.

வரும் ஜனவரி 1 முதல் அனைத்து வகையான கழிவுப் பொருள்களின் இறக்குமதியும் முழுமையாக நிறுத்தப்படும் என ஷின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சீனாஇறக்குமதி