சிங்கப்பூரில் புதிதாக ஐவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று

சிங்கப்பூரில் புதிதாக ஐவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று

1 mins read
5015cccc-574c-4958-b67c-09956a63eb9b
ஒருவர் சமூகத் தொற்றுக்கு ஆளானவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 30) புதிதாக ஐந்து பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் நான்கு பேர் வெளிநாட்டில் இருந்து இங்கு வந்தவர்கள். ஒருவர் சமூகத் தொற்றுக்கு ஆளானவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த நால்வருக்கும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. புதிதாக கிருமி தொற்றியோரையும் சேர்த்து இங்கு மொத்தம் 58,218 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் தொடர்ந்து 20 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை.

நேற்று குணமடைந்து வீடு திரும்பிய ஐந்து பேரையும் சேர்த்து மொத்தம் 58,109 பேர் முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள். கொவிட்-19 காரணமாக மொத்தம் 29 பேர் மாண்டு உள்ளனர். கிருமித்தொற்று இருந்தும் இதர காரணங்களால் மாண்டவர்கள் 15 பேர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கிருமித்தொற்று