சீனா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்து

சீனா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்து

2 mins read
7581a147-d40c-466b-b193-f7af68ece508
கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு ஆஸ்திரேலிய எல்லைகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து முதல்முறையாக நேற்று டார்வின் விமான நிலையத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தரையிறங்கியதாக இப்படத்தை வெளியிட்ட சார்ல்ஸ் டார்வின் பல்கலைக் கழகம் தெரிவித்தது. படம்: ஏஎஃப்பி -

ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு அவப்­பெயரை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் சமூக ஊடங்­களில் போலி படத்தை வெளி­யிட்டதற்காக சீன அர­சாங்­கம் மன்­னிப்­புக் கேட்க வேண்­டும் என்று ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

ஆப்­கானிஸ்தான் குழந்­தை­யின் கழுத்­தில் ஆஸ்­தி­ரே­லிய வீரர் ஒரு­வர் கத்தி வைத்­தி­ருப்­பது போன்ற படத்தை டுவிட்­ட­ரில் பெய்­ஜிங் உலவ விட்­ட­தாக ஆஸ்­தி­ரே­லியா குற்­றம் சாட்­டி­யுள்­ளது.

"ஆஸ்­தி­ரே­லி­யாவை பழி­வாங்­கும் நோக்­கத்­தோடு சீன வெளி­யு­றவு அைமச்­சின் பேச்­சா­ளர் ஷோவி லிஜி­யான் அந்­தப் படத்தை வெளி­யிட்­டுள்­ளார். அதனை உட­ன­டி­யாக பெய்­ஜிங் அகற்ற வேண்­டும். போலி­யாக உரு­வாக்­கப்­பட்ட படத்தை டுவிட்­ட­ரும் அகற்ற வேண்­டும்," என்று அவர் கூறினார்.

"சீனா­வின் இத்­த­கைய செயலை எந்­த­வி­தத்­தி­லும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது. சீன அர­சாங்­கம் இதற்­காக அவ­மா­னப்­பட வேண்­டும். ஆஸ்­தி­ரே­லி­யா­வு­ட­னான பதற்­ற­மான உறவை சீனா எப்­படி கையாள்­கிறது என்­பதை உலக நாடு­கள் கவ­னித்­துக்கொண்­டி­ருக்­கின்­றன. இருதரப்பு உற­வுக்கு இது நல்­ல­தல்ல," என்று டுவிட்­டர் பதி­வில் பிர­த­மர் மோரி­சன் குறிப்பிட்டார்.

ஆப்­கா­னிஸ்­தா­னில் கடந்த வாரம் நடந்­த­தாக நம்­பப்­படும் சம்­ப­வம் தொடர்­பில் 13 வீரர்­கள் மீது ஆஸ்­தி­ரே­லிய அர­சாங்­கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. வீரர்கள் மீது போர்க் குற்­றங்­கள் சுமத்­தப்­ப­ட­லாம் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சீன அரசாங்கத்தின் பேச்சாளர் தமது டுவிட்டர் பதிவில் ஆப்கானிஸ் தானில் பொதுமக்களும் சிறைக் கைதிகளும் ஆஸ்திரேலிய வீரர் களால் கொல்லப்படுவது அதிர்ச்சி யளிக்கிறது என்று தெரிவித் திருந்தார். கிருமித்தொற்றின் மூலத்தைக் கண்டறிய தனிப்பட்ட விசாரணை யாளர்களை வூஹான் நகருக்குள் அனுமதிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா கூறியதால் சீனா ஆத்திரமடைந்துள்ளது. அதன் பிறகு இரு தரப்பு உறவு நாளுக்கு நாள் மோசமடைந்துவருகிறது.

இதற்கிடையே நீண்டநாட் களுக்குப் பிறகு வெளிநாட்டவர்கள் நுழைய ஆஸ்திரேலிய எல்லைகள் திறக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்