சுடச் சுடச் செய்திகள்

மாடெர்னா ஆற்றல் 94.1%; அங்கீகாரத்துக்காக அமெரிக்கா, ஐரோப்பாவிடம் விண்ணப்பம்

மாடெர்னா தனது தடுப்­பூசி 94.1 விழுக்­காடு ஆற்­றல் வாய்ந்­தது என்று கூறி­யுள்­ளது.

ஆய்­வின் முழு விவ­ரங்­களில் இது தெரிய வந்­துள்­ள­தா­கக் கூறிய அது, அமெ­ரிக்­கா­வின் அங்­கீ­கா­ரத்துக்­காக ஆவ­ணங்­க­ளைத் தாக்­கல் செய்­துள்­ள­து.

அதே சம­யத்­தில் ஐரோப்­பா­வின் ஒப்­பு­தலைப் பெற­வும் அது முழு வீச்­சில் இறங்­கி­யி­ருக்­கிறது.

தடுப்­பூ­சியை வயது, இனம், சம­யம், வசிப்­பி­டம் வித்­தி­யா­ச­மின்றி பரி­சோ­திக்­கப்­பட்­ட­தில் அதன் ஆற்­றல் வேறு­ப­டா­மல் வலு­வான நிலை­யில் இருந்­தது. தொற்­று­நோ­யால் மோச­மாக பாதிக்­கப்­ப­டு­வ­தி­லி­ருந்து நூறு விழுக்­காடு வரை தடுக்­கும் ஆற்­றல் தடுப்­பூ­சிக்கு உள்­ளது என்று மாடெர்னா சொன்னது.

“எங்­க­ளு­டைய தடுப்­பூசி மிக­வும் சக்­தி­வாய்ந்­தது என்­பதை நிரூ­பிக்­கும் தர­வு­க­ளைத் தயா­ராக வைத்­துள்­ளோம்,” என்று மொடர்­னா­வின் தலைமை மருத்­துவ அதி­காரி தல் ஸாக்ஸ் தொலை­பேசி வழி­யாக அளித்த பேட்­டி­யில் கூறி­னார்.

“கொள்ளை நோய் பாதிப்­பி­லி­ருந்து உல­கை மாற்­றி­ய­மைக்­கும் முயற்­சி­யில் எங்­க­ளு­டைய பங்­கும் இருக்க விரும்­பு­கி­றோம்,” என்­றார் அவர். ஆய்­வின் முடி­வில் தடுப்­பூசி 94.1% வலு­வா­னது என்­பது தெரிந்­த­தும் உணர்ச்­சி­வ­சப்­பட்­ட­தாக அவர் சொன்னார்.

ஃபைசரும் ஜெர்­ம­னின் பயோ­டெக்­கும் புதிய தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி உரு­வாக்­கி­யுள்ள தடுப்­பூ­சி­யும் 95 விழுக்­காடு ஆற்­றல் வாய்ந்­தது என்று அறி­வித்­துள்ள நிலை­யில் மாடெர்னா­வின் ஆய்வு முடி­வு­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

ஐரோப்­பிய மருந்து முக­வை­யி­ட­மும் நிபந்­த­னை­யு­டன் கூடிய அங்­கீ­கா­ரத்­துக்கு விண்­ணப்­பிக்­கப் போவ­தா­க­வும் மாடெர்னா கூறி­யுள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon