சீனாவில் 12 பேர் தடுத்துவைப்பு; ஹாங்காங் தலையிட உலக நாடுகள் வலியுறுத்து

ஹாங்­காங்­கி­லி­ருந்து கடல்­வ­ழி­யா­கத் தப்­பிச்செல்ல எண்­ணிய 12 பேரை சீனா தடுத்­து­வைத்­துள்­ளது. அவர்­களில் ஆக இளை­ய­வ­ருக்கு 16 வயது மட்­டுமே ஆகிறது. தற்­பொ­ழுது இந்த விவ­கா­ரத்­தில் ஹாங்­காங் அரசு தலை­யி­டக் கோரி 18 நாடு­க­ளைச் சேர்ந்த 150க்கும் மேற்­பட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஹாங்­காங் தலைமையை வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

அர­சாங்க எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களில் பங்­கேற்ற குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­கும் இந்த 12 பேரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி­யன்று சீன அதி­கா­ரி­க­ளால் பிடி­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவர்­கள் அனை­வ­ரைப் பற்­றி­யும் இது­வரை எவ்­வி­தத் தக­வ­லும் இல்­லாத நிலை­யில் இவர்­களை எவ­ரும் சந்­திக்க முடி­யாத நிலை இருந்­து­வ­ரு­கிறது.

சட்­ட­வி­ரோ­த­மாக எல்லை கடந்­தது, அதற்காகக் கும்­ப­லைக் கூட்­டி­யது போன்ற குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­வ­தாக சீன அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். குற்றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் அவர்­க­ளுக்கு 7 ஆண்­டு­கள் வரை சிறைத்­தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

ஹாங்­காங் தலைமை நிர்­வாகி கேரி லாமுக்கு 18 நாடு­க­ளைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எழு­திய கடி­தத்­தில், “ஹாங்­காங்­கின் தலைமை நிர்­வாகி என்ற முறை­யில் இந்த இளை­யர்­களின் சார்­பாக, அவர்­க­ளுக்கு நீதி கிடைக்­கும் வகை­யில் நீங்­கள் தலை­யிட வேண்­டும். இதில் நீங்­கள் தவ­றி­னால், ஹாங்­காங் மக்­க­ளுக்­காக சேவை ெசய்­ய­வும் அவர்­க­ளின் நல்­வாழ்வு, பாது­காப்பு ஆகி­ய­வற்றை உறுதிசெய்­ய­வும் உங்­க­ளுக்கு உள்ள பொறுப்­பி­லி­ருந்து நீங்­கள் வில­கி­ய­வர் ஆவீர்­கள்,” என்று அந்­தக் கடி­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி கூறு­கிறது.

அந்­தப் பன்­னி­ரு­வ­ரும் ஹாங்­காங்­கிற்கு உட­ன­டி­யாக திருப்பி அனுப்­பப்­பட வேண்­டும். அத்­து­டன், அவர்­கள் தங்­க­ளைப் பிர­தி­நி­திக்க வழக்­க­றி­ஞர்­களை நிய­மிக்க அனு­ம­திக்­கப்­பட வேண்­டும். மேலும், அவர்­க­ளின் குடும்ப உறுப்­பி­னர்­கள் அவர்­களைச் சந்­திக்க அனு­ம­திக்­கப்­பட வேண்­டும் என்று அந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

அந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஆஸ்­தி­ரே­லியா, கனடா, டென்­மார்க், பிரான்ஸ், ஜெர்­மனி, அயர்­லாந்து, இத்­தாலி, ஜப்­பான், லித்­து­வே­னியா, மியன்­மார், நெதர்­லாந்து, நியூ­சி­லாந்து, நைஜீ­ரியா, நார்வே, சுவீடன், உகாண்டா, பிரிட்­டன், அமெ­ரிக்கா மற்­றும் ஐரோப்­பிய நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் ஆவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!