தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய்க் கப்பல் மீது சவூதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகத்தில் தாக்குதல்

1 mins read
ef949810-fb67-496b-a549-13a790003715
படம்: இபிஏ -

சவூதி அரே­பிய துறை­மு­க­மான ஜெட்­டா­வில் நேற்று நடந்த வெடிப்­புச் சம்­ப­வம் ஒன்­றில், குறைந்­தது ஒரு கப்­பல் சேத­மடைந்­த­தாக வெவ்­வேறு செய்தி அறிக்­கை­கள் கூறு­கின்­றன.

வெடிபொருள்கள் ஏற்றிய படகு ஒன்று அந்தக் கப்பல் மீது மோதியதாக சவூதி அரேபியாவின் ஆற்றல் துறை அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

தாக்குதல்களுக்கு யார் காரணம் என்பது பற்றியோ அல்லது வெடிபொருள் நிரம்பிய அந்தக் கப்பல் பற்றியோ தகவல்கள் ஏதுமில்லை.

எண்­ணெய்-பொருள் கப்­ப­லான 'பிட­பள்யு ரைண்', ஞாயிற்­றுக்­கிழமை பின்­னி­ரவு 12.40 மணி­ய­ள­வில் எண்­ணெய் வெளி­யேற்­றப் பணி­யில் இருந்­த­போது தாக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

உடனே சிங்­கப்­பூ­ரால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அந்த கலன், தன் எண்­ணெய் வெளி­யேற்ற வேலையை நிறுத்­திக்­கொண்­டது.

யாருக்­கும் காயம் ஏற்­ப­டாத வண்­ணம் நெருப்­பும் அணைக்­கப்­பட்­டது.

இதே போல் சுமார் மூன்று வாரங்­க­ளுக்கு முன், சவூ­தி­யின் ஷுகேக் முனை­யத்­தில் எண்­ணெய்க் கப்­பல் ஒன்று தாக்­கப்­பட்டு சேத­ம­டைந்­தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்