விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர் ஒருவர், வெளிநாடுகளில் இருந்து வந்த 15 பேர் என புதிதாக 16 பேரை கொவிட்-19 தொற்றியுள்ளதைச் சுகாதார அமைச்சு இன்று உறுதிப்படுத்தி இருக்கிறது. சமூகத்தில் எவரும் பாதிக்கப்படவில்லை.
வெளிநாடுகளிலிருந்து வந்த அந்த 15 பேருக்கும் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.
முன்னதாக, வெளிநாடுகளில் இருந்து வந்த ஐவருக்கு நேற்று கிருமி தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் நால்வர் வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்கள்; ஒருவர் குறுகியகால விசாவில் வந்த 24 வயது இந்தியர்.
அந்த வேலை அனுமதிச் சீட்டு ஊழியர்கள் நால்வரும் பெண்கள். அவர்களில் 27 முதல் 35 வயதுக்குட்பட்ட மூவர் இந்தோனீசியாவில் இருந்து வந்தவர்கள்; இன்னொருவர் பிலிப்பீன்சில் இருந்து வந்த 32 வயதுப் பெண்.
சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் 58,341 பேரை கொரோனா தொற்றிவிட்ட நிலையில், அவர்களில் 58,195 பேர் அதிலிருந்து தேறிவிட்டனர்.


