சிங்கப்பூரில் புதிதாக 10 பேருக்கு கிருமித்தொற்று

சிங்கப்பூரில் புதிதாக 10 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
a212544a-860d-4e65-8077-5fa632bdb672
சமூக அளவில் இன்று ஒருவருக்குத் தொற்று உறுதியானது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று புதிதாக 10 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,432ஆக உள்ளது.

சமூக அளவில் ஒருவருக்குத் தொற்று உறுதியானது. இம்மாதம் 5ஆம் தேதிக்குப் பிறகு சமூகத்தில் ஒருவருக்குத் தொற்று உறுதியாகி இருப்பது இதுவே முதன்முறை.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த ஒன்பது பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்