பிரிட்டிஷ் பயணிகளுக்கு பல நாடுகள் தடை

பிரிட்டிஷ் பயணிகளுக்கு பல நாடுகள் தடை

1 mins read
9da5f48b-9914-41a9-82cd-75f83be85741
ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகள் பிரிட்டனிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்துள்ளன. படம்: இபிஏ -

பிரிட்டனில் புதிய வகை கொரோனா கிருமி பரவி வருவதைக் காரணம் காட்டி தலைநகர் லண்டனிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முடக்கநிலைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகள் பிரிட்டனிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்துள்ளன.

பிரிட்டனிலிருந்து வரும் பயணிகளுக்கான தடையை ஐரோப்பிய நாடுகள் முதலில் அறிவித்தன. அடுத்த மாதம் 1ஆம் தேதி வரை பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு நெதர்லாந்து தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

பிரிட்டனில் ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா கிருமித்தொற்று, ஏற்கெனவே உலகை உலுக்கி வரும் கொரோனா வகையைவிட எளிதாக, வேகமாக பரவக்கூடியது என்று நம்பப்படுவதை அது சுட்டியது.

இத்தாலியும் பிரிட்டனலிருந்து வரும் விமானங்களுக்குத் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. பிரட்டனிலிருந்து வரும் பயணிகளுக்கு பெல்ஜியம் 24 மணி நேரத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை நீட்டிக்கப்படக்கூடும் என்று அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்