கிறிஸ்துமஸ் களிப்பும் கிருமி விழிப்புணர்வும்

1 mins read
686c9ebc-950c-4b7d-98d8-8576742d3f68
படம்: ராய்ட்டர்ஸ் -

கிறிஸ்­து­மஸ் விழாக்­கா­லத்­தை­யும் மக்­க­ளுக்கு யானை­கள் மீதுள்ள ஆர்­வத்­தை­யும் இணைத்து கொரோனா கிரு­மிப் பர­வல் தடுப்பு குறித்த விழிப்­பு­ணர்வை மக்­க­ளி­டம், குறிப்­பாக சிறார்­க­ளி­டம் ஏற்­ப­டுத்­தும் முயற்­சி­யில் தாய்­லாந்து இறங்­கி­யுள்­ளது.

தலை­ந­கர் பேங்­காக்­கில் சான்டா கிளோஸ் போல் வேட­ம­ணிந்த நான்கு யானை­கள் நேற்று பள்ளி ஒன்­றுக்­குச் சென்று மாண­வர்­க­ளுக்கு முகக்­க­வ­சங்­களை அளித்­தன.

யானைக­ளின் வரு­கை­யும் அன்­ப­ளிப்­பும் பிள்­ளை­க­ளுக்கு புதிய உற்­சா­கத்­தைக் கொடுத்­த­து­டன் கிருமி குறித்த விழிப்­பு­ணர்­வை­யும் ஏற்­ப­டுத்­தி­யது.

தாய்லாந்தின் பல்­வேறு மாநி­லங்­க­ளி­லும் நேற்று 46 புதிய தொற்­று­ சம்பவங்கள் பதிவாகி­ய­தாக தாய்­லாந்து சுகா­தார அமைச்சு கூறியது.

புதிய கட்­டுப்­பா­டு­களை விதிப்­பது குறித்து அந்­நாடு ஆலோ­சித்து வரு­கிறது.

குறிப்புச் சொற்கள்