சீனாவில் ஆண்டுதோறும் 35 பில்லியன் கிலோ உணவு தானியங்கள் வீண்

உலகில் ஆக அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் 35 பில்லியன் கிலோ உணவு தானியங்கள் வீணடிக்கப்படுவதாக அந்நாட்டின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சேமிப்பு, போக்குவரத்து, பதப்படுத்தல் ஆகிய நிலைகளின்போது அந்தளவிற்கு தானியங்கள் வீணாவதாகக் கூறப்படுகிறது.

காலாவதியான சேமிப்பிட வசதிகள், தளவாடச் சாதனங்கள், பதப்படுத்தல் தொழில்நுட்பங்கள் போன்ற பல காரணங்களால் இப்படிப் பேரளவிற்கு தானிய இழப்பு ஏற்படுவதாக அந்தச் செய்தியறிக்கை குறிப்பிட்டுள்ளது.

தேசிய மக்கள் காங்கிரஸ் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தானியங்களும் உணவுப்பொருள்கள் வீணடிக்கப்படுவதைக் குறைப்பது உணவுப் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது என்று அவ்வறிக்கை சுட்டியுள்ளது.

“போதுமான அளவு தானியம் கையிருப்பில் இருந்தாலும் நாட்டில் உணவுத் தேவைக்கும் வழங்கலுக்கும் இடையே ஓர் இறுக்கமான சமநிலை நிலவுகிறது,” என்று அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் செயல்திறன்மிக்க அறுவடை இயந்திரத்தை உருவாக்கவும் தானியம் வீணாவதைக் குறைக்கும் வகையில் விவேகமான தானியக் கிடங்குகளை அமைக்கவும் தேசிய மக்கள் காங்கிரசின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், சீன நகரங்களில் ஒவ்வோர் ஆண்டும் உணவு விநியோகத் துறையில் 18 பில்லியன் கிலோ வரை உணவுப்பொருள்கள் வீணாவதையும் அந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

உணவுப்பொருள் வீணடிப்பு அவமானகரமானது என்றும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் சீன அதிபர் ஸி ஜின்பிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உணவுப் பாதுகாப்பு தொடர்பில் நெருக்கடி இருப்பது போன்ற உணர்வைப் பேண வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

அதைத் தொடர்ந்து, உணவுப்பொருள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுப் பிரசாரத்தை பல உள்ளூர் அரசாங்கங்களும் முன்னெடுத்தன. அத்துடன், உணவுப்பொருள் வீணடிப்போரிடம் இருந்து தண்டத்தொகை வசூலிக்குமாறு உணவகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, உலகளவில் கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்களை அடுத்து, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை விரைந்து இயற்றும் பணிகளைச் சீனா முடுக்கிவிடும் என்று சீன அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.

இவ்வாண்டில் சீனாவின் தானிய உற்பத்தி 669.69 மில்லியன் டன்னாகவும் அதன் தானிய விதைப்பு நிலப்பரப்பு 116.8 மில்லியன் ஹெக்டராகவும் அதிகரித்து இருக்கின்றன என்று அந்நாட்டின் புள்ளிவிவரத் துறை தகவல்கள் கூறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!