தொற்று அபாயம் அதிகமுள்ள 3வது, புதுவகை கிருமி கண்டுபிடிப்பு

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் புதிய, மூன்றாவது, மாறுவடிவ கொவிட்-19 கிருமிக்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் மாட் ஹேன்காக் தெரிவித்து இருக்கிறார்.

முதலில் கண்டறியப்பட்ட கொரோனா கிருமியைக் காட்டிலும் புதிய, மாறுவடிவ கிருமி அதிக தொற்று அபாயமுடையது எனச் சொல்லப்படுகிறது.

கொரோனா கிருமியில் புதிய, திடீர் மரபணு மாற்றம் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அண்மைக்காலமாக தென்னாப்பிரிக்காவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு அது காரணமாக இருக்கலாம் என்றும் கடந்த வாரம் அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், “பிரிட்டனில் புதிய, மாறுவடிவ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இரு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பாதிக்கப்பட்ட இருவரும் கடந்த சில வாரங்களில் தென்னாப்பிரிக்கா சென்று திரும்பியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்,” என்று தரு ஹேன்காக் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஏற்கெனவே, தொற்று அபாயம் 70% அதிகம் கொண்ட இன்னொரு மாறுவடிவ கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க பிரிட்டன் முயன்று வருகிறது.

“இந்தப் புதிய, மாறுவடிவ கொரோனா கிருமி அதிக கவலை ஏற்படுத்துவதாக உள்ளது. ஏனெனில், பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாறுவடிவ கொரோனா கிருமியைக் காட்டிலும் அது அதிக தொற்று அபாயத்தைக் கொண்டு இருப்பதாகத் தெரிகிறது,” என்றார் திரு ஹேன்காக்.

புதிய, மாறுவடிவ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோரும் கடந்த இரு வாரங்களாகத் தென்னாப்பிரிக்காவில் இருந்தவர்களும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் கட்டாயமாகத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், நாளை மறுநாள் முதல் தெற்கு இங்கிலாந்தில் மேலும் பல பகுதிகளில் உச்சநிலை சமூகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே 16 மில்லியன் மக்கள் நான்காம் நிலைக் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இன்னும் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படவுள்ளன.

புதிய, மாறுவடிவ கொரோனா கிருமி பரவுவதைக் கட்டுப்படுத்த விதிகள் கடுமையாக்கப்படுவது அவசியம் என்று திரு ஹேன்காக் குறிப்பிட்டார்.

பிரிட்டனில் நேற்று புதிதாக கிட்டத்தட்ட 40,000 பேரை கொரோனா தொற்றியது; 744 பேர் மாண்டுவிட்டனர். கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அங்கு பதிவான ஆக அதிக கொரோனா தொற்று பாதிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து விமான சேவை நிறுத்தம்

இதனிடையே, தென்னாப்பிரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பிரிட்டிஷ் போக்குவரத்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

“புதிய, மாறுவடிவ கொவிட்-19 கிருமிப் பரவலைத் தொடர்ந்து இன்று (நேற்று) காலை 9 மணி முதல் தென்னாப்பிரிக்காவில் இருந்து விமானங்கள் பிரிட்டனில் வந்திறங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளேன்,” என்று போக்குவரத்து அமைச்சர் கிரான்ட் ஷேப்ஸ் கூறிஇருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!