மலேசியாவில் 5 வயது சிறுமி மரணம்; குழந்தைப் பராமரிப்பாளரும் அவரது 2 மகன்களும் கைது

மலேசியாவில் 5 வயது சிறுமி மரணம்; குழந்தைப் பராமரிப்பாளரும் அவரது 2 மகன்களும் கைது

1 mins read
7db1a7a9-2411-4625-a6b6-3a29d21d0c37
-

மலேசியாவின் சென்டுல் பகுதியில் நேற்று 5 வயது சிறுமி, அவரது பராமரிப்பாளர் கொடுமைப்படுத்தியதால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 2.45 மணியளவில் ஜாலான் ஈப்போவில் இருக்கும் கொண்டோமினியத்தில் சிறுமி இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது என சென்டுல் மாவட்ட போலிஸ் தலைமை உதவி ஆணையர் பெ எங் லாய் குறிப்பிட்டார்.

போலிசார் சம்பவ இடத்துக்குச் சென்றபோது சிறுமி படுக்கையில் கிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சிறுமியின் உடலைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவரது கால்கள் உட்பட பல இடங்களில் சிராய்ப்புக் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுமி இறந்து போனதை துணை மருத்துவ அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உறுதிப்படுத்தினர்.

சிறுமியின் சடலம் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் குழந்தையைப் பராமரித்து வந்த மாதுவையும் அவரது இரண்டு மகன்களையும் போலிசார் கைது செய்தனர். சிறுமியின் மரணத்தில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கைதான அவர்கள் 22 முதல் 61 வயதுக்குக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

சிறுவர்கள் சட்டம் 2001ன் பிரிவு 31(1)ன்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக திரு பெ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்