பெய்ஜிங்கில் வரலாறு காணாத குளிர்

சீனாவின் பெய்ஜிங் நகரில் ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவு குளிரால் மக்கள் நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவாக அங்கு வெப்பநிலை மைனஸ் 19.6 டிகிரி செல்சியசுக்கு இறங்கியுள்ளது.

அத்துடன் பலமாக வீசும் குளிர் காற்றால் பெய்ஜிங் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் இதுபோன்ற குளிர் காற்றுடன் கூடிய குறைந்த வெப்பநிலை அங்கு 1966ஆம் ஆண்டு வீசியது.

இன்று அதிகாலை பெய்ஜிங்கில் உள்ள 20 தேசிய வானிலை நிலையங்களிலும் வெப்பநிலை மிகக்குறைவான அளவையே காட்டியதாக பெய்ஜிங் நகராட்சி வானிலை நிலையம் கூறியது.

கடந்த புதன்கிழமையில் இருந்து இதுபோன்ற குளிரையும் குளிர் காற்றையும் சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். அதனையடுத்து பெய்ஜிங் நகராட்சி மன்றம் நேற்று கடுங்குளிர் மற்றும் குளிர் காற்று குறித்து எச்சரிக்கை விடுத்தது.

வெள்ளிக்கிழமை பூஜ்யத்துக்கும் குறைவான அளவிலான வெப்பநிலையே இருக்கும் என்றும் வானிலை அதிகாரிகள் கூறினர்.

குளிரைச் சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டனர்.

இந்த வெப்பநிலை சனிக்கிழமையில் இருந்து ஒன்று ஒன்றாகக் கூடி வழக்கநிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை நிலையம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!