மேற்கு ஆஸ்திரேலியப் பள்ளிகளில் தமிழ்

மேற்கு ஆஸ்­தி­ரே­லிய மாநில மாண­வர்­கள் விரை­வில் தமிழ், இந்தி, கொரிய மொழி­களை அரசாங்கப் பள்­ளி­களில் ஒரு பாட­மாகக் கற்­க­லாம்.

வரும் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்­தப் புதிய மொழிப் பாடத் திட்­டம் அறி­மு­க­மா­கும் என்று அம்­மா­நில அரசு அறி­வித்­துள்­ளது.

பாலர் பள்ளி முதல் 12ஆம் வகுப்பு வரை­ பயிலும் மாண­வர்­களுக்­கான பாடத்­திட்­டங்கள் உரு­வாக்­கப்­பட உள்­ள­தாக மேற்கு ஆஸ்­தி­ரே­லிய மாநில கல்வி, பயிற்­சி­க­ளுக்­கான அமைச்­சர் சூ எலரி தெரி­வித்­துள்­ளார்.

“மேற்கு ஆஸ்­தி­ரே­லி­யா­வில் அனைத்­து­லக அள­வில் பலதரப் பட்ட கலா­சா­ரம் உள்­ளது.

“இந்தப் புதிய மொழிப் பாடங்­கள் உள்­ளூர் வட்­டா­ரங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு பரந்த தேர்வை வழங்­கு­வ­தற்­கான வாய்ப்பை பள்ளி­க­ளுக்கு வழங்­கும் என்று அமைச்சர் சூ கூறி­னார்.

மேற்கு ஆஸ்­தி­ரே­லிய மா­நி­லத்­தில் 190க்கும் அதி­க­மான மொழி­கள் பேசப்­ப­டு­வ­தாக அர­சாங்­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

தமிழ்மொழிப் பாடத்திட்டம் மேற்கு ஆஸ்திரேலியாவிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!