30 நிமிடங்களில் 30 கிலோ ஆரெஞ்சு சாப்பிட்டு முடித்த நால்வர்; போட்டியெல்லாம் இல்லை…

முப்பது நிமிடங்களுக்குள் 30 கிலோ ஆரெஞ்சுப் பழங்களை சாப்பிட்டு முடித்தனர் நால்வர். எதோ போட்டியில் பங்கேற்று இவ்வாறு சாதனை புரிந்ததாகக் கருதவேண்டாம்.

விமானப் பயணத்தின்போது கூடுதல் பயணப் பொதிக்கான கட்டணத்தைத் தவிர்க்கவே அவர்கள் இவ்வாறு செய்தனர்.

சீனாவின் யுன்னான் மாகாணத்தின் குன்மிங் விமான நிலையத்தில் அவர்கள் கொண்டு வந்த பொருள்களின் எடை, அனுமதிக்கப்பட்ட எடையைவிட 30 கிலோ அதிகமாக இருந்தது.

வர்த்தகம் தொடர்பில் பயணம் செய்த அவர்கள் 50 யுவான் விலைக்கு 30 கிலோ ஆரெஞ்சுப் பழங்களை விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக வாங்கினர்.

அதனை விமானத்தில் எடுத்துச் செல்ல 300 யுவான் வரை தேவைப்பட்டது. அந்தக் கூடுதல் கட்டணத்தைச் செலுத்தவும் விரும்பவில்லை; ஆரெஞ்சுப் பழங்களை வீணாக்கவும் மனமில்லை.

எனவே, மூவரும் சேர்ந்து அந்தப் பழங்களை சாப்பிட்டுவிட்டு விமானத்தில் ஏற முடிவு செய்ததாக குளோபல் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்தது.

30 நிமிடங்களுக்குள் சாப்பிட்டு முடித்தனார். ஆனால், இனிமேல் வாழ்நாளில் ஆரெஞ்சுப் பழங்களைச் சாப்பிடமாட்டோம் என்று கூறும் அளவுக்கு வாயில் புண்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!