கேளிக்கைப் பூங்காவில் கயிறு அறுந்து விபத்து; 16 பேர் காயம், மூவர் கவலைக்கிடம்

கேளிக்கைப் பூங்கா ஒன்றில் ஊஞ்சல் விளையாட்டின் கயிறு அறுந்து ஏற்பட்ட விபத்தில் 16 பேர் காயமடைந்தனர்; மூவர் கடுமையான காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டது.

சீனாவின் ஹூனான் மாகாணத்தில் நேற்று இந்த விபத்து நேர்ந்ததாக இன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஷாவோயாங் கவுன்டி கிராமத்தில், உள்ளூர் நேரப்படி, பிற்பகல் 3.40 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாடு இழந்து ‘ஃபிளையிங் சேர்’ எனப்படும் ஊஞ்சல் விளையாட்டில், ஈடுபட்டிருந்த சிலர் கீழே விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்தின் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாகவும் அந்த கேளிக்கைப் பூங்கா மூடப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!