வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஒருவருக்கு கொவிட்-19

வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஒருவருக்கு கொவிட்-19

1 mins read
770b37df-9628-4968-856e-18c57fddeb9f
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (பிப்ரவரி 16) நண்பகல் நிலவரப்படி புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிங்கப்பூரில் இன்றுவரை மொத்தம் 59,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்.

உள்ளூர் சமூகத்திலோ, விடுதிகளிலோ புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்ட 9 பேருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்களில் ஒருவர் சிங்கப்பூர் நிரந்தரவாசி, ஒருவர் சார்ந்திருப்போர் அனுமதி அட்டை வைத்திருப்பவர், மூவர் வேலை அனுமதியுடன் இங்கு வந்தவர்கள், மற்ற நால்வரும் குறுகியகால வருகை அனுமதியுடன் இங்கு வந்தவர்கள்.

நேற்றைய நிலவரப்படி 59,661 பேர் தொற்றிலிருந்து விடுபட்டு முழுமையாக குணமடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்