பிலிப்பீன்சில் தடுப்பூசித் திட்டம் தொடக்கம்

மணிலா: பிலிப்­பீன்­சில் கொவிட்-19 தடுப்­பூசித் திட்­டம் நேற்று முன்தினம் தொடங்­கி­யது.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­கள், ராணு­வத்­தி­னர் ஆகி­யோ­ருக்கு முதல் கட்­ட­மாக தடுப்­பூசி போடப்­படும். சீனா­வின் சினோ­வேக் நிறு­வ­னம் தயா­ரித்­துள்ள தடுப்­பூ­சியை பிலிப்­பீன்ஸ் வர­வழைத்­துள்­ளது. பல வாரங்­க­ளாக ஏற்­பட்ட தாம­தத்­துக்­குப் பிறகு கடந்த சனிக்கிழமையன்று 600,000க்கும் அதி­க­மான தடுப்­பூசி மருந்து அளவு பிலிப்­பீன்சை சென்­று­சேர்ந்­தது.

மற்ற நாட்­டுத் தலை­வர்­க­ளைப்­போல அல்­லா­மல், பிலிப்­பீன்ஸ் அதி­பர் ரோட்­ரிகோ டுட்­டர்டே முத­லா­வ­தாக தடுப்­பூ­சியைப் போட்­டுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

தமது வயது கார­ண­மாக சீனா­வில் தயா­ரிக்­கப்­பட்ட மற்­றொரு தடுப்­பூ­சி­யைத் தமக்­குப் போட மருத்­து­வர்­கள் பரிந்­து­ரைத்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அந்த தடுப்­பூ­சி­யின் பெயர் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

பிலிப்­பீன்­சின் ஆகப்­பெ­ரிய பொது மருத்­து­வ­ம­னை­யின் தலை­வர் டாக்­டர் ஜெரார்டோ லெகாஸ்பி முத­லா­வது நப­ராக நேற்று முன்தினம் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், “ஆகச் சிறந்த தடுப்­பூ­சிக்­காக நாம் காத்­தி­ருக்க வேண்­டாம். அப்­படி ஒன்­றும் கிடை­யாது.

“பாது­காப்­பான, செயல்­தி­றன்­மிக்க தடுப்­பூ­சியே ஆகச் சிறந்­தது என்பேன். அது­வும் அது முன்­கூட்டியே வந்­து­வி­டும்,” என்று குறிப்­பிட்­டார்.

சினோ­வேக் நிறு­வ­னத்­தின் கொரோ­னா­வேக் தடுப்­பூ­சி­யின் அவ­ச­ர­கா­லப் பயன்­பாட்­டிற்கு பிலிப்­பீன்ஸ் கடந்த வாரம் ஒப்­பு­தல் அளித்­தி­ருந்­தது.

கிரு­மித்­தொற்றை 65 விழுக்­காடு வரை மட்­டுமே தடுப்­ப­தற்­கான செயல்­தி­றனை அந்­தத் தடுப்­பூசி கொண்­டி­ருப்­ப­தால், அது மூத்­தோ­ருக்­குப் போட பரிந்­து­ரைக்­கப்­ப­ட­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!