சிங்கப்பூரில் இன்று (மார்ச் 15) புதிதாக 12 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.
பாதிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் சிங்கப்பூர் வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
சமூக அளவிலோ வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளிலோ எவருக்கும் புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்படவில்லை.
சிங்கப்பூரில் இதுவரை கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்தம் எண்ணிக்கை 60,117.

