வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த 11 பேருக்கு கிருமித்தொற்று

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த 11 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
dd90b3fb-feaa-426a-9771-1c769eb69aa3
சிங்கப்பூரில் இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்தம் எண்ணிக்கை 60,128. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (மார்ச் 16) புதிதாக 11 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

அவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 60,128.

பாதிக்கப்பட்ட அனைவரும் சிங்கப்பூர் வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாக சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

சமூக அளவிலோ வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளிலோ எவருக்கும் புதிதாக கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்
கொரோனாகிருமித்தொற்றுசிங்கப்பூர்