வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 17 பேருக்கு கிருமித்தொற்று

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 17 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
3d3c562a-eadc-49a4-88ac-0567da781d81
சிங்கப்பூரில் இதுவரை தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 60,184. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (மார்ச் 20) நண்பகல் நிலவரப்படி புதிதாக 17 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள். தனிமையில் இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சமூகத்திலும் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளிலும் இன்று புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.

நேற்று புதிதாக 15 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டதாகவும் அவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 60,184.

குறிப்புச் சொற்கள்
கொரோனாகிருமித்தொற்றுசிங்கப்பூர்