வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 13 பேருக்கு கிருமித்தொற்று

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 13 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
1e6c39a3-30dd-4a53-93a8-7d2d368f8ccb
புதிதாக பாதிக்கப்பட்ட 13 பேரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் மேலும் 13 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்த்து கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60,221க்கு அதிகரித்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட 13 பேரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். சிங்கப்பூருக்கு வந்ததும் அவர்கள் அனைவரும் வீட்டில் தங்க உத்தரவிடப்பட்டது என்று சுகாதார அைமச்சு தெரிவித்தது. சமூக அளவில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளிலும் எவரும் பாதிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கிருமித்தொற்று