சிங்கப்பூரில் இன்று (மார்ச் 31) சமூக அளவில் ஒருவர் உட்பட புதிதாக 34 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளில் எவருக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்படவில்லை.
வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த அனைவரும் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாக சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 60,381 ஆக உள்ளது.

