வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 25 பேருக்கு கிருமித்தொற்று

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 25 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
28872158-adb6-4685-ae1d-9369456aca16
சிங்கப்பூரில் இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 60,678 ஆக உள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 12) நண்பகல் நிலவரப்படி புதிதாக 25 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

சமூக அளவிலோ வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளிலோ புதிதாக எவருக்கும் கிருமித்தொற்று பதிவாகவில்லை.

சிங்கப்பூரில் இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 60,678 ஆக உள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கிருமித்தொற்றுகொவிட்-19