ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு சிக்கல், தடை

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு சிக்கல், தடை

1 mins read
6d8ebea8-a1cb-44fd-ad2d-ff3702cd55db
-

வாஷிங்­டன்: ஐம்­பது வய­துக்­குக் கீழ் உள்ள ஆறு பெண்­

க­ளுக்கு ரத்த உறைவு ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து ஜான்­சன் அண்ட் ஜான்­சன் தடுப்­பூசி மருந்­தின் பயன்­பாட்டை சில நாட்­க­ளுக்கு நிறுத்தி வைக்க அமெ­ரிக்க சுகா­தார அமைப்­பு­கள் பரிந்­து­ரைத்து உள்­ளன. இத­னைத் தொடர்ந்து தென்­னாப்­பி­ரிக்கா அந்த தடுப்­பூ­சிக்கு தற்­கா­லி­கத் தடை விதித்­துள்­ளது. அமெரிக்காவில் இதுவரை ஆறு மில்லியனுக்கு மேற்பட்ட மக்களுக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் நால்­வ­ரின் சம்­ப­வம் குறித்து ஆய்வு நடத்தி வரு­வ­தாக ஐரோப்­பிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். அத­னைத் தொடர்ந்து ஐரோப்­பிய நாடு­

க­ளுக்­கான தடுப்பூசி விநி­யோ­கத்தை தாம­தப்­ப­டுத்த இருப்­ப­தாக ஜான்­சன் அண்ட் ஜான்­சன் அறி­வித்துள்­ளது. இந்த ரத்த உறைவு கிட்­டத்­தட்ட ஆஸ்ட்­ரா­ஸெ­னகா தடுப்­பூசி ஏற்படுத்தியதைப்போல இருப்­ப­தாக அமெ­ரிக்­கா­வின் உணவு, மருந்து நிர்­வா­கத் துறை அதி­காரி பீட்­டர் மார்க்ஸ் கூறி­யுள்­ளார்.