மீட்சிக்குப் பிறகும் கொவிட்-19 தாக்கம் தொடர்ந்து இருக்கும்

மீட்சிக்குப் பிறகும் கொவிட்-19 தாக்கம் தொடர்ந்து இருக்கும்

2 mins read
6eb9a08f-09fa-49c9-849c-33fe072d32eb
-

வாஷிங்டன்: கொவிட்-19 பாதிப்­பு­களில் இருந்து உலகம் மீண்­டு­விட்­டா­லும் நெடுங்காலத்­துக்கு அதன் விளைவுகள் உல­கப் பொரு­ளியலில் ஆழ­மான வடுக்­களாக இருந்துவரு மென வல்­லு­நர்­கள் கூறுகிறார்கள்.

கொவிட்-19 தொற்­றைச் சமா­ளித்து மீண்டு வர US$26 டிரிலியன் (S$34 டிரி­லியன்) ஆத­ர­வுத் திட்­டங்­கள், தடுப்­பூசி இயக்­கம் ஆகி­யவை கார­ண­மாக பல­ரும் எதிர்­பார்த்­த­தை­விட வேக­மாக உல­கப் பொருளியில் மீட்சி சாதிக்­கப்­படும் என்ற நம்­பிக்கை ஏற்­பட்­டுள்­ளது.

ஆனா­லும்­கூட கொரோனா கார­ண­மாக பல நாடு­க­ளி­லும் ஏற்­பட்­டுள்ள கல்வி பாதிப்பு, வேலை இழப்­பு­கள், போர்க்­கால அள­வுக்கு ஏற்­பட்­டு­விட்ட கடன்­கள், இனங்­கள், ஆண்-பெண் பாலி­னம், தலை­முறை, மக்­கள்­தொகை ஆகி­ய­வற்­றில் அதிகமாகும் ஏற்­றத்­தாழ்­வு­கள் ஆகி­யவை வடுக்­க­ளாக நெடுங்­கா­லத்­துக்­குத் தொட­ரும்.

குறிப்­பாக ஏழை நாடு­களி­லேயே பாதிப்­பு­கள் அதிகமாக இருக்­கும் என்­றும் அவர்­கள் கூறுகிறார்கள்.

கொரோனா கார­ண­மாக சென்ற ஆண்­டில் உல­கில் ஏற்­பட்ட பாதிப்பு, 1930களில் ஏற்­பட்ட உலக மகா பொரு­ளி­யல் பாதிப்­புக்­குப் பிறகு இது­வரை உல­கம் காணாதது என்று கூறப்படுகிறது.

உலக அள­வில் 255 மில்­லி­யன் மக்­கள் முழு நேர வேலையை இழந்துவிட்­ட­தாக அனைத்­து­லக தொழி­லா­ளர் நிறு­வ­னம் மதிப்­பி­டு­கிறது. கடந்த 1990களுக்­குப் பிறகு முதல்­மு­றை­யாக உலக அள­வில் நடுத்­தர வர்க்­கத்­தி­னர் நிலை இறங்கி­விட்­டதாக 'பியூ' ஆய்வு மையம் என்ற அமைப்­பைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் தெரி­விக்­கி­றார்­கள்.

எல்லா நாடு­க­ளி­லும் பாதிப்பு ஒரே மாதி­ரி­யாக இருக்­காது என்று வல்­லு­நர்­கள் கணிக்­கி­றார்­கள்.

கொவிட்-19க்கு முந்­தைய நிலைக்­குத் திரும்ப காலம் பிடிக்­கும் என்று உலக வங்கி தலைமை பொரு­ளி­யல் வல்­லு­நர் கார்­மென் ரெயின்­ஹார்ட் கூறி­னார்.

குறிப்பாக ஊழியர்களுக்கு மறு தேர்ச்சிகள், படுமோசமாக பாதிக்கப் பட்ட நாடுகளுக்கு உதவிகள் போன்ற துறைகளில் சரியான கொள்கைகள் இடம்பெறும் பட்சத்தில், இந்தப் பத்து ஆண்டு களுக்குள் நன்கு மீண்டுவிட முடியும் என்று வல்லுநர்கள் கூறு கிறார்கள்.