ஈரானில் நிலநடுக்கம்

ஈரானில் நிலநடுக்கம்

1 mins read
61b4f70b-7d01-42e7-961c-1ee14c0f0ca9
-

துபாய்: ஈரா­னின் தென் மாவட்­ட­மான புஷே­ரில் நேற்று 5.9 அள­வுக்கு நில­ந­டுக்­கம் ஏற்­பட்­டது. அந்த பேரி­டர் ஏற்­பட்ட பகு­தி­க்கு அருகே ­அணு­ மின்­சக்தி நிலை­யம் ஒன்று இருக்­கிறது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இருந்­தா­லும் நில­நடுக்­கம் கார­ண­மாக உயி­ரு­டற் சேதம் பற்­றிய அறி­விப்பு உட­ன­டி­யாக இடம்­பெ­ற­வில்லை.

ரிக் என்ற நக­ரில் நில­ந­டுக்­கம் மையம் கொண்­டி­ருந்­த­தா­க­வும் அந்த நக­ரில் உள்ள மருத்­து­வ­மனை­களும் அரு­கில் உள்ள நகர்­களில் செயல்­படும் மருத்­து­வ­மனை­களும் விழிப்­பூட்­டப்­பட்­டன.

நில­ந­டுக்­கம் ஏற்­பட்ட பகு­திக்கு 50 மருத்­துவ வாக­னங்­கள் அனுப்­பப்­பட்­ட­தாக வட்­டார அதி­காரி ஒரு­வர் அர­சாங்கத் தொலைக்­காட்­சி­யில் தெரி­வித்­தார்.

கோனாவே என்ற நக­ரில் மின்­சா­ரம், தொலை­பேசி, இணை­யம் எல்­லாம் செய­லி­ழந்­து­விட்­ட­தா­க­வும் மக்­கள் அச்­சத்­தில் வீதிக்கு வந்து­விட்­ட­தா­க­வும் ஊட­கங்­கள் தெரி­வித்­த­ன. குறைந்­த­பட்­சம் இரண்டு பேர் காயம­டைந்­து­விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

நில­ந­டுக்­கத்­தைத் தொடர்ந்து நில அதிர்­வு­கள் ஏற்­பட்­ட­தா­க­வும் சில கிரா­மங்­களில் மண் சுவர்­கள் இடிந்­து­விட்­ட­தா­க­வும் ஊடகங்கள் தெரி­வித்தன.