சமூகத்தில் ஒருவர் உட்பட சிங்கப்பூரில் புதிதாக 20 பேருக்கு இன்று (ஏப்ரல் 19) கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எஞ்சிய 19 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள். அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்று தொடர்ந்து நான்காவது நாளாக சமூக அளவில் தொற்று பதிவாகியுள்ளது.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிதாக எவருக்கும் தொற்று பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

