பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் ரத்து

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் ரத்து

1 mins read
cca99f4a-5417-4873-93c7-b6ceff47ee11
இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஸ்டோன்ஹவுஸ் எனும் இடத்தில் குடியிருப்புக் கட்டுமானப் பணிகளை இன்று (ஏப்ரல் 19) பார்வையிட்ட பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன். படம்: ஏஎஃப்பி -

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் ஜான்சனின் பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஜான்சன் இம்மாத இறுதியில் இந்தியா வரவிருந்தார். 'பிரெக்ஸிட்' கூட்டமைப்பு நாடுகளின் பயணத்திற்குப் பிறகு அவர் மேற்கொள்ளவிருந்த முக்கியமான பயணமாக இந்தப் பயணம் கருதப்பட்டது.

முன்னதாக, இந்திய குடியரசு தினத்தன்று சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள பிரதமர் ஜான்சன் இந்தியா வரவிருந்தார். ஆனால், பிரிட்டனில் கொரோனா தொற்று அதிகரித்த காரணத்தால் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இப்போது இரண்டாவது முறையாக பிரதமர் ஜான்சனின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்