நியூயார்க்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் தெஸ்லா மின்சார கார் விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த இரண்டு பேர் மாண்டு விட்டதாக போலிஸ் கூறியது என்று ஊடகங்கள் தெரிவித்தன.
விபத்து நிகழ்ந்தபோது அந்த காரில் ஓட்டுநர் யாருமே இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
ஹியுஸ்டன் நகருக்கு வடக்கே சனிக்கிழமை அதிவேகத் தடத்தில் கார் சென்றபோது மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்துவிட்டதாக அதிகாரிகள் விளக்கினர்.

