டான் டோக் செங் மருத்துவமனையில் கிருமித்தொற்று கவலைக்கு உரியதுதான் என்றாலும் அதிக கவலை தேவையில்லை

டான் டோக் செங் மருத்துவமனையில் கிருமித்தொற்று கவலைக்கு உரியதுதான் என்றாலும் அதிக கவலை தேவையில்லை

1 mins read
d04a6bf9-953d-4687-be54-bf832ef75d8f
புலன்விசாரணை முடிவுகள் வெளிவரும் வரை யூகச்செய்திகளை வெளியிடாமல் ஒதுங்கி இருக்கும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

டான் டோக் செங் மருத்துவமனையில் கிருமித்தொற்றுக் குழுமம் ஏற்பட்டு இருப்பது கவலைக்கு உரியதுதான் என்றாலும் அளவுக்கு அதிக கவலை தேவையில்லை என்று பல்வேறு வல்லுநர்களுக்கும் கருத்து தெரிவித்துள்ளனர்.

"கிருமித்தொற்றுக்கு மருத்துவமனைகளும் இலக்காகும் என்பதை நினைவூட்டுவதாகவே இந்த நிலவரம் இருக்கிறது.

"தொற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாக எடுக்க வேண்டிய அவசியத்தையும் இது நினைவூட்டுகிறது," என்று அவர்கள் கூறினர்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சாவ் சுவீ ஹோக் பொது சுகாதார துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் ஜெரிமி லிம், "இன்னும் நாம் விவேகமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதையே மருத்துவமனை நிலவரம் வலியுறுத்துகிறது. என்றாலும் அளவுக்கு அதிக அச்சம் கொள்ளத்தேவையில்லை," என்று கூறினார்.

புலன்விசாரணை முடிவுகள் வெளிவரும் வரை யூகச்செய்திகளை வெளியிடாமல் ஒதுங்கி இருக்கும்படி மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

"நல்ல வேளையாக, அந்த மருத்துவமனையைச் சேர்ந்த பெரும்பாலான ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது,'' என்று அதே துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் லியாங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்