சிங்கப்பூரில் கடந்த ஆண்டு வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் கொரோனா கிருமித்தொற்று உச்சத்தை எட்டியது நாம் அறிந்ததே. விடுதிகளில் வசிக்கும் நிலையே, கிருமித்தொற்று அதிகரிக்க காரணம் எனக் கூறப்பட்டது.
தங்குவிடுதிகளில் கிருமித்தொற்று நிலவரம் உச்சத்தை எட்டியதைத் தொடர்ந்து ஓராண்டு ஆன நிலையில், தங்குவிடுதிகளில் வசிக்கும் நிலை எப்படி உருமாறியுள்ளது என்பதைக் காட்டும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் காணொளி இந்தச் செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.

