(காணொளி) இந்தியாவுக்கு உயிர்வாயுக் கலன்களை அனுப்பிய சிங்கப்பூர்

(காணொளி) இந்தியாவுக்கு உயிர்வாயுக் கலன்களை அனுப்பிய சிங்கப்பூர்

1 mins read
ad5dc7a1-4264-497a-abbc-03ab07bcaad4
-
multi-img1 of 2

இந்­தி­யா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று இரண்­டாம் அலை மோச­மாகி உள்­ள­தால் அங்கு ஏற்­பட்­டுள்ள அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­கள் பற்­றாக்­கு­றையை அடுத்து, அந்­நாட்­டிற்கு உதவி செய்­யும் வித­மாக சிங்­கப்­பூர் உயிர்­வா­யுக் கலன்­க­ளைக் இரண்டு விமானங்களில் அனுப்­பி­யுள்­ளது.

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை, 256 உயிர்­வா­யுக் கலன்­களை இரண்டு சி-130 விமா­னங்­களில் மேற்கு வங்­கா­ளத்­திற்கு அனுப்­பி­யது.

பாய லேபார் ஆகாயப் படைத் தளத்தில் உயிர்­வா­யுக் கலன்­கள் விமானங்களில் ஏற்றப்படுவதைக் காட்டும் காணொளி இந்தச் செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்