தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்

1 mins read
052debec-9014-4dc4-9992-bc97ce5aad09
வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும் ஊழியர்கள், அவ்வாறு செய்வதை முதலாளிகள் கடைப்பிடிக்க வேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும் ஊழியர்கள், அவ்வாறு செய்வதை முதலாளிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கொவிட்-19க்கு எதிராக அமைக்கப்பட்ட அமைச்சுகள்நிலை பணிக்குழு இன்று (மே 14) அறிவித்துள்ளது.

ஊழியர்கள் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தால், அவர்கள் வேலையிடத்திற்கு வெவ்வேறு நேரத்தில் சென்று வீடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை முதலாளிகள் வகுக்க வேண்டும்.

வேலையிடத்தில் சமூக ஒன்றுகூடல்களுக்கு அனுமதி அளிக்கப்படாது. முகக்கவசம் நீக்கப்பட்டிருந்தால் ஊழியர்கள் ஒருவரோடு ஒருவர் கலப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

குறிப்புச் சொற்கள்