வழிபாட்டுத் தலங்கள், கடைத்தொகுதிகளில் எண்ணிக்கை வரம்பு குறைக்கப்படுகிறது

வழிபாட்டுத் தலங்கள், கடைத்தொகுதிகளில் எண்ணிக்கை வரம்பு குறைக்கப்படுகிறது

1 mins read
b4638a54-2399-4bcb-b3d9-2e572bde064f
நோன்புப் பெருநாள் தொழுகை முடிந்து நேற்று (மே 13) யூசோஃப் இஷாக் பள்ளிவாசலைவிட்டு வெளியேறும் வழிபாட்டாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வழிபாட்டுத் தலங்களில் ஒரே நேரத்தில் 50 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். வழிபாட்டு நிகழ்வுகளுக்கு முன்னதாக கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்படாவிட்டால் இந்த எண்ணிக்கை வரம்பு பொருந்தும்.

நிகழ்வுக்கு முந்திய பரிசோதனை நடத்தப்படால் எண்ணிக்கை வரம்பு 100 ஆக இருக்கும்.

வழிபாட்டின்போது பாடுவதற்கு அனுமதி அளிக்கப்படாது.

இதற்கிடையே, கடைத்தொகுதிகளுக்குச் செல்வோர் எண்ணிக்கையிலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு நபருக்கு தற்போதைய 10 சதுர மீட்டர் பரப்பளவில் இருந்து ஒருவருக்கு 16 சதுர மீட்டராக எண்ணிக்கை வரம்பு மேலும் குறைக்கப்படவிருக்கிறது.

பிரபலமான கடைத்தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் நுழைவுக் கட்டுப்பாடுகள் தொடரும்.

குறிப்புச் சொற்கள்