சிங்கப்பூரில் மே 16 முதல் ஜூன் 13 வரை புதிய கட்டுப்பாடுகள்: ஒரு பார்வை

சிங்கப்பூரில் மே 16 முதல் ஜூன் 13 வரை புதிய கட்டுப்பாடுகள்: ஒரு பார்வை

1 mins read
20e09e11-61d9-4bdb-a295-b896dde85f25
கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவில் புதிய கட்டுப்பாடுகள் இன்று (மே 14) அறிவிக்கப்பட்டன. படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

சிங்கப்பூரில் சமூக அளவில் கொவிட்-19 தொற்று பரவுவது சற்று கூடியுள்ளதையடுத்து, அதைத் தடுக்கும் விதமாகக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அது குறித்து மேல் விவரங்கள் இங்கு இடம்பெறுகின்றன:

♦ உணவகங்கள், உணவு நிலையங்களில் அமர்ந்து உண்ண முடியாது; வாங்கிச் செல்ல, உணவை வீட்டிற்கு விநியோகிக்க மட்டும் அனுமதி.

♦ சமூக ஒன்றுகூடல்களில் அதிகபட்சம் இருவர் மட்டுமே இடம்பெறலாம்.

♦ வீடுகளில் ஒரு நாளில் இரு வேறு வருகையாளர்களை மட்டும் வரவேற்கலாம்.

♦ வழிபாட்டுத் தலங்கள், திரை அரங்குகள், நேரடி நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சிக்குமுன் கொரோனா பரிசோதனையுடன் அதிகபட்சம் 100 பேரையும் பரிசோதனையின்றி 50 பேரையும் அனுமதிக்கலாம்.

♦ திருமண விருந்துக்கு அனுமதி இல்லை.

♦ ஈமச்சடங்குகளில் 20 பேர் வரை பங்கேற்கலாம்.

குறிப்புச் சொற்கள்