விமான நிலையம் சென்று வந்தோருக்கு இலவச கொவிட்-19 பரிசோதனை

விமான நிலையம் சென்று வந்தோருக்கு இலவச கொவிட்-19 பரிசோதனை

1 mins read
b5d1f073-055c-4c9f-8a1e-2f9d703cb24b
சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் இன்று (மே 14) காணப்பட்ட பயணிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சாங்கி விமான நிலையத்தின் முனையம் 3க்கு மே 1ஆம் தேதி முதல் யாராவது சென்று வந்திருந்தால் அவர்களுக்கு இலவசமாக கொவிட்-19 பரிசோதனை வாய்ப்பு கொடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது. சாங்கி விமான நிலையத் தொற்றுக் குழுமத்தில் இதுவரை 59 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் எல்லாருமே முனையம் 1ல் அல்லது 3ல் வேலை பார்த்தவர்கள் அல்லது அங்கு சென்று வந்தவர்கள். பரிசோதனைக்கு எப்படி முன்பதிவு செய்வது என்பது பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்குப் படிப்படியாக குறுஞ்செய்தி மூலம் அமைச்சு தகவல் தெரிவிக்கும்.

மே 1ஆம் தேதிக்குப் பிறகு சாங்கி விமான நிலையம் முனையம் 1க்குச் சென்று இருப்போர், தாங்கள் சென்ற நாளில் இருந்து 14 நாட்களுக்குத் தங்கள் உடல்நிலையை அணுக்கமாகக் கண்காணித்து வரவேண்டும் என்று அமைச்சு ஆலோசனை கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்