சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 70 வயது ஆடவர் ஒருவர் நேற்று (மே 20) உயிரிழந்துவிட்டார். அவரையும் சேர்த்து சிங்கப்பூரில் கிருமித்தொற்று பாதிப்பால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 32 ஆக உள்ளது.
அந்த ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனையின் வார்டு 9Dயில் ஏப்ரல் 22ஆம் தேதி சேர்க்கப்பட்டிருந்தார். ஏப்ரல் 30ஆம் தேதி அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.
கொவிட்-19க்கு எதிராக அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. அவருக்கு நுரையீரல் புற்றுநோயும் சீரற்ற இதயத்துடிப்பு பாதிப்பும் இருந்தன.
தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் அவரது குடும்பத்தாரைத் தொடர்புகொண்டு அவர்களுக்கு உதவி வருகிறது.

