மலேசியாவில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

மலேசியாவில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

1 mins read
d5bbafd4-517a-49ee-8d11-1f8288ef6ad3
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் உட்பட கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பொது மருத்துவமனைகள் 113% கொள்ளளவுடன் செயல்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். படம்: நூர் ஹிஷாம் அப்துல்லா/ஃபேஸ்புக் -

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் உட்பட கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பொது மருத்துவமனைகள் 113% கொள்ளளவுடன் செயல்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

"அதிகமான நோயாளிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் அதைச் சமாளிக்க, படுக்கை மற்றும் சில கருவிகளுடன் பொதுப் பிரிவுகளும் தற்காலிகமாக தீவிர சிகிச்சைப் பிரிவுகளாக மாற்றப்பட வேண்டியுள்ளது. இருந்தாலும், கிருமித்தொற்றால் பாதிக்கப்படாத மற்ற நோயாளிகளுக்கு, தேவையான முக்கிய மருத்துவப் பராமரிப்பு கிடைக்கும் வாய்ப்பை இது குறைக்கிறது," என்று ஃபேஸ்புக் வழியாக டாக்டர் நூர் ஹிஷாம் கூறியிருக்கிறார்.

மலேசியாவில் அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகிருமித்தொற்றுமருத்துவமனை