ஒரே வாரத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளுக்கு அமெரிக்கத் தமிழர்கள் உதவி

ஒரே வாரத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளுக்கு அமெரிக்கத் தமிழர்கள் உதவி

1 mins read
ee5684bd-f588-41a3-b997-d7d5a1ca3cf6
மறைந்த பெற்றோருடன் அவர்களது பிள்ளைகள். படம்: தமிழக ஊடகம் -

தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த லாரி ஓட்டுநர் ஜெயசீலனும் அவருைடய மனைவியும் ஒரே வாரத்தில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர்.

இதனால், அந்தத் தம்பதியின் மூன்று பிள்ளைகளும் ஆதரவற்றவர்களான நிலையில், அவர்களின் எதிர்கால நலனுக்கு உதவும் வகையில் அமெரிக்காவாழ் தமிழர்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

மறைந்த ஜெயசீலனின் உறவினரான குமார் ராஜா, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள கணினி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

அமெரிக்காவில் உள்ள தமது நண்பர்களிடம் அவர் துயரச் செய்தியைப் பகிர்ந்துகொண்டதை அடுத்து, சக நண்பர்களுடன் சேர்ந்து 50,000 அமெரிக்க டாலர் நிதி திரட்டும் முயற்சியை முன்னெ டுத்துள்ளனர்.

பெற்றோரை இழந்து வாடும் பிள்ளைகளின் நலனுக்காக பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்