சோல்: தென்கொரியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்தோர் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் மாதத்திற்குள் சுமார் 70 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடுவதை இலக்காக கொண்டுள்ளது தென்கொரியா.
52 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தென்கொரியாவில் இதுவரை வெறும் 7.7 விழுக்காட்டினரே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
60 மற்றும் 74 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினருக்கு மேல் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் குவான் டியோக்-சியோல் சொன்னார்.
குறைந்தது ஒருமுறையாவது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வரும் ஜூன் மாதம் முதல் பெரிய அளவில் ஒன்றுகூட அனுமதிக்கப் படுவார்கள் என்று தென்கொரிய பிரதமர் கிம் பூ தெரிவித்துள்ளார்.
70 விழுக்காட்டினருக்கு மேற் பட்டவர்கள் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியாவது போட்டுக்கொண்ட பிறகு, தனிமைப்
படுத்தல் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.

