சிங்கப்பூரில் இப்போது நடப்பில் இருக்கும் கொவிட்-19 சமூகப் பாதுகாப்பு இடைவெளி நிபந்தனையை மீறி சட்டவிரோத பொதுப் பொழுதுபோக்கு இடம் ஒன்றில் கலந்துறவாடி, மதுபானம் குடித்ததாகக் கூறப்பட்டதன் தொடர்பில் மொத்தம் 38 பேர் விசாரிக்கப்படுகிறார்கள்.
அவர்களில் பதின்ம வயதினர் பலரும் அடங்குவர். ஜாலான் புசாரில் உள்ள தொழில்துறைக் கட்டடம் ஒன்றில் மே 16ஆம் தேதியும் பாய லேபார் ரோட்டில் இருக்கும் அலுவலகம் ஒன்றில் மே 22ஆம் தேதியும் அதிகாரிகள் தனித்தனியாக சோதனை நடத்தியதில் அவர்கள் பிடிபட்டதாக இன்று அறிக்கையில் போலிஸ் தெரிவித்தது.

