பிரதமர் லீ: 60 வயது கடந்தோருக்கு உடனடி தடுப்பூசி ஏற்பாடு, முன்பதிவு தேவையில்லை

பிரதமர் லீ: 60 வயது கடந்தோருக்கு உடனடி தடுப்பூசி ஏற்பாடு, முன்பதிவு தேவையில்லை

1 mins read
57471563-5ed9-4f2c-9e6a-a1046eb46668
-

சிங்கப்பூரில் 60 வயதைக் கடந்த முதியோர் ஏதாவது ஒரு கொவிட்-19 தடுப்பூசி நிலையத்திற்கு சென்று உடனே ஊசி போட்டுக்கொள்ளலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளனார்.

இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முதியோருக்குச் சிறப்புச் சலுகையாக தான் இதை அறிவிப்பதாக அவர் கூறினார்.

அந்த வயதுப் பிரிவினரைப் பொறுத்தவரை முன்பதிவு தேவைஇல்லை என்றார் பிரதமர்.

"உங்களுக்கு மேலும் வசதி செய்து தருகிறோம். தடுப்பூசி நிலையத்திற்கு நேரே போய் உடனே நீங்கள் ஊசி போட்டுக்கொள்ளலாம்," என்று பிரதமர் லீ கூறினார்.

சிங்கப்பூரின் கொவிட்-19 நிலவரம் பற்றி பிரதமர் இன்று (மே 31) தொலைக்காட்சியில் பேசினார்.

சிங்கப்பூரில் தடுப்பூசி இயக்கத்தை வேகப்படுத்துவதற்கான முயற்சிகள் பற்றி அப்போது அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அடுத்த கட்ட முயற்சிகளை பிரதமர் தமது உரையில் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்