ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் உள்ள ரயிலில் ஆடவர் ஒருவர் பத்து பேரைக் கத்தியால் குத்திக் காயப்படுத்தியதாக அந்நாட்டு போலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (ஆகஸ்ட் 6) சிங்கப்பூர் நேரப்படி இரவு 7.40 மணிக்கு நிகழ்ந்தது. மகிழ்ச்சியுடன் காணப்பட்ட பெண்களைப் பார்த்து தாம் ஆத்திரமடைந்ததாகவும் அவர்களைக் கொலை செய்ய முடிவெடுத்ததாகவும் கைது செய்யப்பட்ட 36 வயது ஆடவர் போலிசாரிடம் கூறியதாக ஜப்பானிய ஊடகம் ஒன்று செய்தியில் தெரிவித்தது.
தாக்கப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவி ஒருவரும் அடங்குவார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

