கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டால் வீடு, கார் உள்ளிட்ட கவர்ச்சிகர பரிசுகள்

கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டால் வீடு, கார் உள்ளிட்ட கவர்ச்சிகர பரிசுகள்

1 mins read
6faa850c-aca4-4732-90f6-738beb125eaf
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி போட்டுக்கொண்ட இளையர்கள் இருவர். படம்: ராய்ட்டர்ஸ் -

கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள கூடுதலானோரை ஊக்குவிக்கும் நோக்கில், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு குலுக்கல் முறையில் பரிசுகளை வழங்கப்போவதாக பிலிப்பீன்சின் சீபு நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

வீடு, கார், ஹோட்டலில் தங்குவதற்காக 100,000 பீசோ (S$2,660) மதிப்பிலான அன்பளிப்புச் சான்றிதழ்கள், 100,000 பீசோ மதிப்பிலான கல்வி உபகாரச் சம்பளங்கள், 100,000 பீசோ மதிப்புடைய மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவை பரிசுகளில் அடங்கும்.

இந்தக் குலுக்கலுக்கான மேல்விவரம் அக்டோபர் 18ஆம் தேதி அறிவிக்கப்படும்.

சீபு நகரில் புதன்கிழமை (அக்டோபர் 13) நிலவரப்படி, 322,063 பேர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்