2020ஆம் ஆண்டு ஆசியாவுக்கு ஆக வெப்பமான ஆண்டு

2020ஆம் ஆண்டு ஆசியாவுக்கு ஆக வெப்பமான ஆண்டு

1 mins read
ef573d3f-6db0-4cb7-8f4a-53cf7f01e3dd
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

ஜெனிவா: 2020ஆம் ஆண்டு, ஆசியாவுக்கு ஆக வெப்பமான ஆண்டாக இருந்ததாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 26) தெரிவித்துள்ளது.

ஆசிய கண்டத்தின் மேம்பாட்டிற்கு மோசமான பருவநிலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அது கூறியது.

ஆசியாவின் ஒவ்வொரு பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டது. பருவநிலை மாற்றத்தால் பல ஆசிய நாடுகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதை ஐநாவின் வருடாந்திர அறிக்கை தெரிவித்தது.

சீனாவுக்கு US$238 பில்லியன் (S$320 billion) இழப்பு ஏற்பட்டது. அதற்கு அடுத்த நிலைகளில் இந்தியாவுக்கு US$87 பில்லியன், ஜப்பானுக்கு US$83 பில்லியன், தென்கொரியாவுக்கு US$24 பில்லியன் இழப்பு ஏற்பட்டது.

1981-2010ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்துடன் ஒப்புநோக்க, கடந்த ஆண்டு ஆசியாவில் சராசரி வெப்பநிலை 1.39 டிகிரி செல்சியஸ் அதிகமாகப் பதிவாகியது.

குறிப்புச் சொற்கள்
வெப்பம்ஆசியா