ஓமிக்ரான் கிருமிப் பரவல் அச்சம் காரணமாக, பயணம் செய்யத் தடை விதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்த்துள்ளது இஸ்ரேல். அந்தப் பட்டியலில் 50க்கும் மேற்பட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பயணத் தடை, சிங்கப்பூர் நேரப்படி புதன்கிழமை (டிசம்பர் 22) காலை 6 மணிக்கு நடப்புக்கு வருகிறது. அதன்படி, அமெரிக்கா செல்ல இஸ்ரேலியர்களுக்கு சிறப்பு அனுமதி அவசியமாகும்.
சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு இணங்க, அமெரிக்கா, இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி, ஹங்கேரி, மொரோக்கோ, போர்ச்சுகல், கனடா, சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகிய நாடுகளை, பயணம் செய்யத் தடை விதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் திங்கட்கிழமை (டிசம்பர் 20) சேர்த்துள்ளது இஸ்ரேலிய அரசாங்கம்.
இஸ்ரேலில் இதுவரை 134 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 307 பேரிடம் ஓமிரான் தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் 167 பேரிடம் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.


