பிரிட்டி‌ஷ் பிரதமர் பதவி விலக நெருக்குதல்

பிரிட்டி‌ஷ் பிரதமர் பதவி விலக நெருக்குதல்

1 mins read
6f85bf1f-344b-4484-8ebf-0f3f0b55f094
-

லண்டன்: கிருமிப் பரவல் முடக்கநிலை நடப்பில் இருந்த சென்ற ஆண்டு மே மாதத்தில், டவுனிங் ஸ்திரீட்டில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டதை ஒப்புக்கொண்ட பிரிட்டி‌ஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், அதற்காக மன்னிப்பும் கோரினார்.

பொதுமக்களின் கோபத்தைத் தன்னால் புரிந்துகொள்ள முடிவதாகவும் அவர் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

பிரதமர் பொறுப்பின்றி செயற்பட்டதற்காக அவர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், அபத்தமான பொய்கள், சாக்குப்போக்கு சொன்ன பிரதமர் பதவி விலக வேண்டும் எனக் கூறினார்.